விழுப்புரத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

52பார்த்தது
விழுப்புரத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
விழுப்புரம் கே.கே. நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கஞ்சா வைத்திருந்த மூவரை போலீசார் பிடிக்க முயன்றபோது 2 பேர் தப்பியோடினர். ஒருவரை போலீசார் பிடித்தனர். 

விசாரணையில், பிடிபட்டவர் கே.கே. நகர் அண்ணா நகரைச் சேர்ந்த ரவி மகன் வானவராயன் (எ) ராகுல், 24; தப்பியோடியவர்கள் தனுஷ்ராஜ், 19; விஷால், 20; என்பது தெரியவந்தது. ராகுலிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராகுலை கைது செய்து, தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி