விழுப்புரத்தில் இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

72பார்த்தது
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் முகமதியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமால்பாஷா, 40. இவரது மனைவி அல்மாஸ், 25. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். இருவரும், இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள். தம்பதிக்குள் குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த அல்மாஸ், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அல்மாசின் தந்தை ஜான்பாஷா, 41; அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you