விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம் சாலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின வார விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மணவாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.