பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

69பார்த்தது
பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி பலி
திண்டிவனம் அருகே தனியார் பள்ளி பஸ் ஏறியதில், கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி இறந்தார்.

திண்டிவனம் அடுத்த இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் விநாயகம், 39; கூலி தொழிலாளி. இவர், அருகே உள்ள செல்லியம்மன் கோவில் காலி இடத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.

இதேபோல், கடந்த 27ம் தேதி இரவு 10 மணிக்கு வந்து படுத்து தூங்கியுள்ளார். அப்போது, அங்கு வழக்கமாக நிறுத்தப்படும் தனியார் பள்ளி பஸ் ஒன்றை, அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் பெருமாள் மகன் ரவி, 47; எடுத்து வந்து பார்க்கிங் செய்த போது, அங்கு தூங்கிக்கொண்டிருந்த விநாயகம் மீது, பஸ் டயர் ஏறியதால் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி