விழுப்புரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

73பார்த்தது
விழுப்புரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம் அருகே உள்ள கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் முரளி என்ற புஷ்பராஜ் (வயது 32). தொழிலாளி. இவர் குடிப்பழக்கம் உடையவர். இதற்காக அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக தெரிகிறது. சம்பவத்தன்று புஷ்பராஜ் அதே கிராமத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி