வளவனூர் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறப்பு

52பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (54), கூலித்தொழிலாளி, விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் கால் கழுவசென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஆற்று நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி