விழுப்புரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

67பார்த்தது
விழுப்புரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் முகமதியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமால்பாஷா மனைவி அல்மாஸ் (வயது 25). இவரை கமால்பாஷா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பவுஷிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. கமால்பாஷா, சத்தியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அல்மாஸ், மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண் டார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்மாஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி