விழுப்புரம் அருகே கணவன் திட்டியதால் மனைவி மாயமானார்.

56பார்த்தது
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவனேசன் மனைவி சவிதா, 26; இவர்களுக்கு 8 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி, பிள்ளைகள் ஏன் தெருவில் விளையாடுகிறார்கள், அவர்களை கவனிக்கவில்லையா என, சிவனேசன் தட்டிக்கேட்டு சவிதாவை திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்து, வீட்டிலிருந்து வெளியே சென்ற சவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிவனேசன் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து சவிதாவை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி