வார்டு உறுப்பினர் புகார்: ஊராட்சி தலைவர் மீது வழக்கு

51பார்த்தது
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை மகன் செல்வம், 38; தி. மு. க. , கிளைச் செயலாளரான இவர் ஊராட்சி தலைவராக உள்ளார். இதே ஊராட்சி உப்புமுத்தாம்பாளையத்தை சேர்ந்த அன்புகுமார் மனைவி பிரியா, 35; இவர், ஊராட்சி 3வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
இவர், தனக்கு தெரியாமல், கடந்த மார்ச் மாதம், ஊராட்சி தீர்மான கோப்புகளில், தனது கையெழுத்தை, ஊராட்சி தலைவர் செல்வம் போட்டு, முறைகேடு செய்துள்ளதாக வளவனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ஊராட்சி தலைவர் செல்வம் மீது நேற்று போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி