விழுப்புரம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தலைமை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, சீனியர் டாக்டர் சாய் சிவக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் லயன்ஸ் ஆளுநர் சரவணன் வரவேற்றார். விழுப்புரம் இ. எஸ். நர்சிங் கல்லுாரி, அன்னை தெரேஸா நர்சிங் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை எஸ். பி. , தீபக் சிவாச், கொடியசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம்- சென்னை சாலையில் சென்ற மாணவர்கள், அகர்வால் கண் மருத்துவமனை எதிரில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.
அங்கு ஊர்வலத்தை முடித்து வைத்து, ஏ. டி. எஸ். பி. , தினகரன் வாழ்த்துரை வழங்கினார். இதில் ஜே. ஆர். சி. , மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை லயன்ஸ் சங்க மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் சிவக்குமார், வெங்கடேசன், தனபால், குபேரன், ராஜவேல், கோபி, முரளிதரன், சிவராமன், சேகர், நடராஜன், தனசேகர், வசந்த், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.