விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். செல்வகுமாரும் அவரது சகோதரர் பெருமாள் ராஜூம் சென்னையில் கே.கே நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்போது சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பெருமாள் ராஜை தனி அறையில் தள்ளி செல்வகுமார் பூட்டியுள்ளார். பின் செல்வகுமார் மற்றொரு அறைக்குள் சென்று, கதவை உள்புறம் பூட்டிக்கொண்டார். பின்னர், 2-வது தளத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புற கதவைத் திறந்து, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி கீழே இறங்க செல்வகுமார் முயற்சித்துள்ளார்.
தவறி கீழே விழுந்ததில், மதில் சுவரில் இருந்த கம்பி, செல்வகுமார் உடலில் குத்தி கிழித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.