விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

72பார்த்தது
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுவதாகவும், தங்கள் சங்கத்தின் சார்பில் விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து தாங்கள் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் சங்கத்தின் மாவட்டச் செயலர்கள் மு. மகாலட்சுமி (விழுப்புரம்), பெ. பாலகிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் ச. சந்தராசு, விழுப்புரம் மாவட்ட தேன்கூடு மாற்றுத் திறனாளிகள் உரிமை நலச் சங்கத்தின் ஏ. பூபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தினர் அளித்த தகுதியான மாற்றுத் திறனாளிகளின் பட்டியலின்படி, முதல்வர் விழுப்புரம் வருகையின்போது, வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி