திருவள்ளுவர் திருவுருவ சிலை வெள்ளிவிழாவை யொட்டி, மேல்களவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி 7ம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா 1,330 திருக்குறள் வாக்கியங்களால் வரைந்த திருவள்ளுவர் உருவ படத்தை தீட்டியதை, கலெக்டர் பழனியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, கலெக்டர் பழனி, அந்த மாணவியின் தனித்திறமையை பாராட்டும் வகையில், திருக்குறள் புத்தகம் வழங்கி மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார். சப்-கலெக்டர் திவ்யான்ஷூநிகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் அருள், அருட்செல்வி, சிவசுப்பிரமணியன், சேகர், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.