விழுப்புரம்: பைக் விபத்து..2 பேர் உடல் சிதறி பலி

74பார்த்தது
விழுப்புரம்: பைக் விபத்து..2 பேர் உடல் சிதறி பலி
விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (29); அதே ஊரை சேர்ந்தவர் சம்பத்குமார் (22) இருவரும் சென்டரிங் தொழிலாளிகள். மார்ச் 10 இரவு 11:30 மணியளவில், கஞ்சனூர் பகுதியில் வேலை செய்து விட்டு பைக்கில் வீடு திரும்பினர். பைக்கை கார்த்திக் ஓட்டி வந்துள்ளார். கெடார் அடுத்த விநாயகபுரம் சாலையில் பைக் வேகமாக வந்த போது நிலை தடுமாறி, சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் வந்த சம்பத்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி