புகையிலை விற்ற இருவர் கைது

65பார்த்தது
புகையிலை விற்ற இருவர் கைது
விழுப்புரத்தில் புகையிலை விற்ற வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், நேற்று வி. மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு, அரசால் தடை செய்த புகையிலை விற்ற இந்திரா நகரை சேர்ந்த அலமேலு, 42; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

அதே போல், டவுன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், நேற்று ரயில் நிலையத்தில் ரோந்து சென்ற போது, புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த திருமலை மகன் நரேந்திரன், 24; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி