விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர், 55, ஜூஸ் கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில், நேருஜி சாலையில் சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த விழுப்புரம் ஜி. ஆர். பி. , தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், 33; சுதன், 32; இருவரும் சத்தம் போட்டு கத்தியபடி வந்தனர். இதனை, அப்துல்காதர் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், சுதன் இருவரும், அவரை திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வன், சுதன் ஆகியோரை கைது செய்தனர்.