ஐயனாரப்பன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

63பார்த்தது
ஐயனாரப்பன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்
விழுப்புரம் அடுத்த ஓட்டேரிபாளையத்தில் உள்ள ஸ்ரீ பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன் திருக்கோவிலில், ஆடி மாத உற்சவம் நடந்து வருகிறது. நேற்று காலை 9 மணிக்கு மூலவர் பொற்கலை பூரணி சமேத ஐயனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.

மூலவர் ஐயனாரப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பொற்கலை, பூரணி தேவியருடன் ஐயனாரப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை 5 மணிக்கு உற்சவர் பொற்கலை, பூரணி ஐயனாரப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு அன்னதானம் நடந்தது. இரவு உற்சவர் ஐயனாரப்பன் திருவீதியுலா நடந்தது.

தொடர்புடைய செய்தி