புதுச்சேரி மாநிலம் அரும்பார்த்தபுரம்
ஜி. என். பாளையம் நடராஜர் நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் மணிகண்டன் என்கிற
மாமணி(வயது 30), வில்லியனூர் கனவா பேட்டை புது நகரை சேர்ந்த உமர் அலி மகன் அசாருதீன்
(25), அரும்பார்த்தபுரம் ஜி. என். பாளையம் அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த பரசுராமன்
மகன் தினேஷ்(21). ரவுடிகளான இவர்கள் 3 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை மற்றும்
கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது செய்ய விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை
செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி
உத்தரவின் பேரில் மணிகண்டன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து கடலூர்
மத்திய சிறையில் அடைத்தனர்.