விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மாம்பழப்பட்டு ரோட்டில் தனியார் டிஜிட்டல் பிரிண்டிங் கடை திறப்பு விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி கலந்து கொண்டு இன்று (ஜூலை 28) காலை திறந்து வைத்தார். விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர். பொன். கௌதமசிகாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.