காணையில் உள்ள கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலய பெருவிழா.

54பார்த்தது
காணையில் உள்ள கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலய பெருவிழா.
விழுப்புரம் அருகே காணையில் புகழ்பெற்ற கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப்பெருவிழா வெகுவிமரிசையாக நடை பெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக் கான பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆலயத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை திருப்பலி, நற்கருணை ஆசிர் நிகழ்ச்சியும், மாலையில் நவநாள் ஜெபம், தேர் பவனியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியாரின் ஆடம்பர தேர் பவனியும் நடக் கிறது. பின்னர் மறுநாள் (14-ந் தேதி) திருப்பலி, கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான பெரு விழா நிறைவு பெறுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி