குவாரி வழக்கில் தாசில்தார் சாட்சியம்

50பார்த்தது
குவாரி வழக்கில் தாசில்தார் சாட்சியம்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தாசில்தார் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் 41 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பேர் பிறழ் சாட்சியமாகி உள்ளனர். நேற்று நடந்த விசாரணையைில், செஞ்சி முன்னாள் வருவாய் ஆய்வாளரான தற்போதைய திண்டிவனம் முத்திரைத்தாள் பிரிவு தாசில்தார் வெங்கடேசன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அதில், 'சம்பவத்தன்று கோபிநாதன் வீட்டில் அப்போதைய செஞ்சி டி. எஸ். பி. , யோடு சோதனையிட சென்றேன். சோதனையில் அவர் வீட்டில், வங்கி கிரெடிட் கார்டு நகலை கைப்பற்றினோம்' என சாட்சியம் அளித்தார்.

அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை நாளை (இன்று) நடைபெறும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி