சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

85பார்த்தது
விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தாய், தந்தை உயிரிழந்த நிலையில், அரியலூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த உறவினர் கருணாநிதி மகன் விக்னேஷ், 19; கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அந்த சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 24ம் தேதி சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, 28ம் தேதி குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விக்னேஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி