வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், தி. மலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள். இந்த நிலையில், அதற்கு எதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக ஆகஸ்ட் 2, 165 பேருந்துகள் மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதி 165 என மொத்தம் 330 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.