வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

75பார்த்தது
வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளையும், நாளை மறுநாளும் (வெள்ளி, சனி) ஆகிய வார இறுதி

நாட்களில் அரசு பஸ்களில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்

வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், கிளாம்

பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம்,

விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு

செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில்

சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கி

ழமை) 125 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 165 பஸ்களும்

ஆக மொத்தம் 290 சிறப்பு பஸ்கள் மேற்கண்ட வழித்தடங்களில்

இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பஸ் நிலை

யத்தில் இருந்து வேலூர், ஒசூர், புதுச்சேரி (வழி- இசிஆர்), திருவண்

ணாமலை (வழி- ஆற்காடு, ஆரணி), திருவண்ணாமலை (வழி-

காஞ்சீபுரம், வந்தவாசி) ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நாளை 40

பஸ்களும், நாளை மறுநாள் 40 பஸ்களும் என மொத்தம் 80 பஸ்கள்

இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்

கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https: //www. tnstc. in

என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை

பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும்

வரை தேவைக்கேற்ப பஸ்களை இயக்கவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி