விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று திருச்சி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியே வந்த டிப்பர் டிராக்டரை போலீசார் நிறுத்தினர். அப்போது, வாகனத்தை விட்டு விட்டு, ஓட்டி வந்தவர் தப்பி சென்றார்.
பின், போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், அதில் அனுமதியின்றி வண்டல் மண் கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.