வளவனுாரில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர் பலி

67பார்த்தது
விழுப்புரம் அடுத்த வடவாம்பலம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் தீபலோகேஷ், 7; இவர், வளவனுாரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் பள்ளி முடிந்ததும், வழக்கம் போல் தீபலோகேஷ் உள்ளிட்ட 3 மாணவர்கள், வி. புதுப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரமோகன், 56; என்பவரின் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர். விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில், வளவனுார் சினிமா தியேட்டர் சாலையில் ஆட்டோ திரும்பியபோது, நாய் குறுக்கே வரவே, டிரைவர் பிரேக் பிடித்ததில் ஆட்டோ கவிழ்ந்தது. அதில் தீபலோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இரு மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி