மணல் கடத்தல் 2 பேர் கைது

51பார்த்தது
மணல் கடத்தல் 2 பேர் கைது
விழுப்புரம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மேலமேடு கிராமம் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர்.

அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி வாகனத்தில் மணல் ஏற்றி கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், வழுதரெட்டி கூத்தான் மகன் ராஜவேல், 36; சாலாமேடு ராமலிங்கம் மகன் மணிகண்டன், 33; என தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி