விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி பரிந்துரையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவின் பேரில் மேல்மலையனூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மகளிர் உதவி எண் இலவச எண்கள் 1930, 14567, 14417, 181 மற்றும் குழந்தை உதவி எண் 1098, போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது