ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி. டி. ஓ. , வாக பதவி உயர்வு

61பார்த்தது
ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி. டி. ஓ. , வாக பதவி உயர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உதவியாளர்களாக பணிபுரிந்த 15 பேர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதில், கோலியனுார் ஒன்றிய உதவியாளர் அரவிந்ததேவி, கண்டமங்கலம் மண்டலம் 3 துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மேல்மலையனுார் ஒன்றியம் மதுசூதனன், அங்குள்ள மண்டலம் 4 துணை பி. டி. ஓ. , வாகவும், கண்டமங்கலம் ஊர்நல அலுவலர் நிலை 1 முருகன், மயிலம் மண்டலம் 2 துணை பி. டி. ஓ. , வாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

வல்லம் ஒன்றியம் ராஜசேகரன், அங்குள்ள மண்டலம் 2 துணை பி. டி. ஓ. , வாகவும், மேல்மலையனுார் ஒன்றியம் ஊர்நல அலுவலர் நிலை 1 கங்காதரன், வல்லம் மண்டலம் 1 துணை பி. டி. ஓ. , வாகவும், செஞ்சி ஒன்றியம் கந்தசாமி, அங்குள்ள மண்டலம் 1 துணை பி. டி. ஓ. , வாக உட்பட 15 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதற்கான உத்தரவை கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி