விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்சேவூர் அருகே நேற்று மாலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் மாணவன் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.