விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

84பார்த்தது
விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
விழுப்புரம் நகரில் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள், சாலையோர வாகனங்கள், கடை விளம்பர பலகைகள் வைப்பது தொடர்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடர் புகாரை அடுத்து, விழுப்புரம் போக்குவரத்து போலீசார், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் - திருச்சி சாலையில், சிக்னல் பகுதியில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் எதிரே, புதிய பஸ் நிலையம் வரை, ஒரு மார்க்கத்தில் சாலையோரம் ஆக்கிரமித்திருந்த கடை விளம்பர பேனர்களை அகற்றினர். அப்போது, சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் அகற்றி, எச்சரித்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி