தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், நகரின் பிரதான சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ். எஸ். ராஜ்மோகன், பொது மேலாளா்கள் அா்ஜுனன், சிங்காரவேல் (மனித வளம்), ரவீந்திரன் (தொழில்நுட்பம்), கோட்ட மேலாளா்கள் ராஜசேகா், மணி, காா்த்திகேயன், உதவி மேலாளா் ஸ்ரீவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.