ஓய்வுபெற்ற எஸ். எஸ். ஐ. வீட்டில் நகைகள், பணம் திருட்டு

76பார்த்தது
விழுப்புரம் சாலாமேடு என். ஜி. ஜி. ஓ. காலனியைச் சோ்ந்தவா் வரதராஜூ (65). ஓய்வுபெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா். இவா், சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையிலுள்ள மகன், மகள் வீட்டுக்குச் சென்றாா். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு வரதராஜூ சென்னையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நேற்று, விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தடயங்கள், விரல்ரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி