விழுப்புரம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் சங்கமம் லயன்ஸ் சங்கம், சங்கமம் லியோ சங்கம், சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. சங்கமம் லயன்ஸ் சங்க தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திலீப்குமார், சங்கமம் லியோ சங்க தலைவர் புவனேஷ், லயன்ஸ் சர்வீஸ் பவுண்டேஷன் தலைவர் ராஜேஷ்குமார், பாபுசெல்வதுரை முன்னிலை வகித்தனர். செயலாளர் கிஷோர் வரவேற்றார்.
மாவட்ட துணை ஆளுநர் ராஜா சுப்ரமணியம் முகாமை துவக்கி வைத்தார். அரசு மருத்துவக்கல்லுாரி ரத்த வங்கி டாக்டர் விஜயா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் நினைவு பரிசு, பாராட்டுச சான்றிதழை முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன் வழங்கினார். லயன்ஸ் சங்க பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.