அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு

65பார்த்தது
அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு
விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள டாக்டர் எம். ஜி. ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவி கள் சேர்க்கைக்கு 690 இடங்களுக்கு 18 ஆயிரத்து 640 விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 29, 30-ந் தேதிகளில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாணவிகள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இக்கலந்தாய்வில் குறித்த நேரத்திற்கு பிறகு வருபவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவிகள் சேர்க்கைக்கு வரும்போது அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். 10-ந் தேதி காலை 9 மணிக்கு பி. காம் (வணிகவியல் பொது- தர மதிப்பெண் 400-349), பி. காம் வொகேஷனல் பாடப் பிரிவுகளுக்கும் (தர மதிப் பெண் 400-306), மதியம் 1 மணிக்கு ஆங்கிலம் பாடப்பிரிவுக்கும் (தர மதிப்பெண் 100-70), 11-ந்தேதி காலை 9 மணிக்கு தமிழ் பாடப்பிரிவுக்கும் (தரமதிப்பெண் 100-93), 12-ந்தேதி காலை 9 மணிக்கு அறிவியல் பாடப்பிரிவுக்கும் (தர மதிப்பெண் 400-310), 13-ந்தேதி காலை 9 மணிக்கு அறிவியல் பாடப்பிரிவுக்கும் (தர மதிப் பெண் 309-290), 14-ந்தேதி கலைப்பிரிவுக்கும் (தர மதிப்பெண் 400-320), 15-ந்தேதி காலை 9 மணிக்கு கலைப்பிரிவுக்கும் (தர மதிப்பெண் 319- 300) கலந்தாய்வு நடக்கிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி