விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் நடராஜன், 70; ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவர் 2 நாட்களுக்க முன் குடும்பத்துடன் திருத்துறைபூண்டிக்கு சென்றார். நேற்று மாலை 3: 00 மணிக்கு இவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து, விழுப்புரம் வந்துபார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.
இதேபோன்று, அதே பகுதியில்பார்த்தசாரதி நகரைச் சேர்ந்தவர் திருமலை, 63; இவர், கடந்த 23ம் தேதி குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 கிராம் நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.