விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், கெங்கராம்பட்டு, பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் முரளி(எ)புஷ்பராஜ் (32), திருமணமான இவா் கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் விக்கிரவாண்டி அருகே செயல்படும் தனியாா் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த புஷ்பராஜ் கடந்த மே 31-ஆம் தேதி வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.