கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

53பார்த்தது
கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி காணாமல் போனார்.

விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தை சேர்ந்தவர் சக்தி மகள் அழகம்மாள், 19; இவர், அரகண்டநல்லூர் தனியார் மகளிர் கல்லூரியில் பி. காம். , மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி