விழுப்புரத்தில் கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கீழ்பெரும்பாக்கம் சர்வேசன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 48; இவரது மகள் கீர்த்திகா, 17; முதலாமாண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி, கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், இன்று விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.