விழுப்புரத்தில் திருநங்கை தற்கொலை.. போலீசார் விசாரணை

66பார்த்தது
திண்டிவனம் அடுத்த அண்டபட்டைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சமந்தா (எ) சதீஷ் (21); திருநங்கை. இவர், தற்போது விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் உள்ள திருநங்கை சம்பா என்பவருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (மார்ச் 28) இரவு வெளியே சென்றுவிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அவரது அறைக்கு சென்ற சமந்தா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி