விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் அரசு நுகர்பொருள் சேமிப்பு குடோன் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு, கஞ்சா விற்ற சாலாமேடு கேசவராஜ், 26; ஜி. ஆர். பி. , தெரு சதாபவ கர்ணன், 19; வி. மருதுார் கிர்த்தி (எ) சிவக்குமார், 24; ஹாஜி முகமது, 21; வழுதரெட்டி சுரேந்தர் (எ) திராவிட முரசு, 26; வினித்குமார், 23; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 மொபைல்கள், ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சென்னை, திருவேற்காட்டை சேர்ந்த சசிகுமார் (எ) சத்யநாராயணனை தேடி வருகின்றனர்.