கத்தியால் வெட்டிய 4 பேருக்கு வலை

53பார்த்தது
கத்தியால் வெட்டிய 4 பேருக்கு வலை
விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் கோபிநாத், 41; இங்குள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் துரை, 27; சஞ்சய், 26; மதனா, 22; விக்ரம், 25; இவர்கள் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருக்கின்றனர். இவர்களை, இங்கிருந்து செல்லும்படி அரசு தரப்பில் கூறியதால், கோபிநாத் வேறு இடத்திற்கு செல்ல விரும்பியுள்ளார்.

இதற்கு துரை உள்பட 4 பேரும் சேர்ந்து நாங்கள் இங்கேயே இருப்பதால் நீங்களும் இங்குதான் வசிக்க வேண்டும் எனக்கூறி நேற்று முன்தினம் தகராறு செய்து, அவரை திட்டி, தாக்கினர். அதை தடுக்க முயன்ற கோபிநாத்தின் மைத்துனர் சந்தோஷ், 37; என்பவரை துரை உள்பட 4 பேரும் சேர்ந்து கத்தியால் தலையில் வெட்டினர். இதில், காயமடைந்த சந்தோஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து துரை உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி