விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.