செஞ்சியை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் பாலச்சந்தர் (வயது 47). சம்பவத்தன்று இவர் விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தில் உள்ள மாம னார் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத் திவிட்டு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ. 20 ஆயிரம் ஆகும். இது குறித்து பாலசந்தர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்