விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜதுரை, 33; இவருக்கு, 5 ஆண்டிற்கு முன் நடந்த விபத்தில், இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் பணிக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜதுரையை, அவரின் தாய் செல்வி வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாயே என திட்டியுள்ளார். அதில், கோபித்துக் கொண்டு வெளியே சென்ற ராஜதுரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ராஜதுரையை தேடி வருகின்றனர்.