வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த 14-ஆம் தேதி முதல் 16-ஆம்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 14, 15-ஆம் ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், வேலைக்குச் செல்வோா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பாதிப்புக்குள்ளாயினா். இதேபோல, விழுப்புரம் நகரத்திலும் பரவலான மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி, பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை: தொடா் மழை காரணமாக கடந்த அக். 15, 16 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இதனால், பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனா்.
மழையளவு (மில்லிமீட்டரில்): மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலூா்பேட்டையில்-82 மி. மீ, மரக்காணம்-35, செஞ்சி-24, வல்லம்-6, வானூா்-3, செம்மேடு-2. 80 மி. மீ. மழை பதிவானது.