கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

69பார்த்தது
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
விழுப்புரம் கோட்டத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் கால்நடைகளும், திண்டிவனம் கோட்டத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 கால்நடைகளும் என மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. கால்நடைகளை கோமாரி நோய்பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. வருகிற 10-ந்தேதி முதல் 10. 7. 2024 வரை 30 நாட்களில் கால்நடை பராமரிப்புத்துறையில் உள்ள 97 தடுப்பூசிபோடும் குழுக்களின் மூலம் தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலமாக 100 சதவீத இலக்கு அடைந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். இத்தடுப்பூசி திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி கட்டாயமாக தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இத்தடுப்பூசியை சினையுற்ற கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை இனங்களில் போட்டுக்கொள்வது அவசியம். இதனால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. 100 சதவீத இலக்கை அடைந்திட கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அதிகளவில் ஆர்வத்துடன் தடுப்பூசிமுகாம் களில் பங்கேற்று தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்து பயனடையவும், பொருளாதார இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி