எம். ஜி. ஆர். , அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு

81பார்த்தது
எம். ஜி. ஆர். , அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
விழுப்புரம் எம். ஜி. ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், 3ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகிறது.

கல்லூரி முதல்வர் தாமோதரன் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் எம். ஜி. ஆர். , அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், இந்தாண்டு (2024-25) மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.

தற்போது, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, நாளை (11ம் தேதி) துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.

தகுதி வாய்ந்த மாணவிகளுக்கு, வழக்கம் போல், மொபைல் போன் மற்றும் மெசேஜ் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தகவல் கிடைத்த மாணவிகள், கல்லுாரியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி