வேலூர்: மதுபாட்டில் கடத்தல் வழக்கு.. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

84பார்த்தது
வேலூர்: மதுபாட்டில் கடத்தல் வழக்கு.. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
வேலுார் மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரன், 52; அரசு பஸ் கண்டக்டர். இவர், கடந்த 15ம் தேதி கடலுாரில் இருந்து வேலுார் சென்ற அரசு பஸ்சில் பணியில் இருந்தார். திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனை அருகே பஸ் வந்த போது விபத்தில் சிக்கியது. திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பஸ்சில் புதுச்சேரியில் இருந்து 151 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. மதுபாட்டில் கடத்தி வந்த அரக்கோணம் அடுத்த புளிப்பாக்கம் நவீன், 23; திருப்பத்துார் அடுத்த நாற்றாம்பள்ளி பார்த்திபன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கண்டக்டர் சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கண்டக்டர் சந்திரனை 'சஸ்பெண்ட்' செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சதீஷ்குமார் நேற்று உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி