காணை ஒன்றிய தி. மு. க. , செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கெடார் அடுத்த தி. கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், எம். எல். ஏ. , க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம். எல். ஏ. , புஷ்பராஜ், மாவட்ட நிர்வாகிகள் முருகன், இளந்திரையன், கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காணை ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா ( தெற்கு), ஆர். முருகன் (வடக்கு), ஆர். பி. முருகன் ( மத்திய ஒன்றியம்), ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகளை துவக்கிட வேண்டும்.
தி. மு. க. , மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் கவுதமசிகாமணியை நியமித்த தலைமைக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.